ECONOMYMEDIA STATEMENT

கடத்தப்பட்ட பாலஸ்தீன ஆடவர் மீட்பு- 18 பேர் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், அக் 6- டோயோட்ட வெல்ஃபையர் வாகனத்தில் வந்த கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்ட பாலஸ்தீன ஆடவர் ஒருவர் கடத்தப்பட்ட ஒரு தினத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தலைநகர், ஜாலான் யாப் க்வான் செங்கில் கடந்த மாதம் 29 ஆம் தேதி நிகழ்ந்த தாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அபு காசிம் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் கோல லங்காட், அம்பாங், பெரனாங் மற்றும் மலாக்காவில் கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 18 பேரை கைது செய்த போலீசார் 31 வயதுடைய அந்த பாலஸ்தீன ஆடவரை கைது செய்தனர் என்று தெரிவித்தார்.

அந்த ஆடவரைக் கடத்திச் சென்று மறைத்து வைப்பதில் 21 முதல் 42 வயது வரையிலான அந்த 18 ஆடவர்களுக்கும் தொடர்பிருந்த தாக அவர் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவில் வசித்து வரும் அந்த ஆடவர் கடந்த மாதம் 21ஆம் தேதி நாட்டிற்கு சுற்றுப்பயணியாக வந்துள்ளதை தொடக்க க் கட்ட விசாரணைகள் காட்டுகின்றன என்றார் அவர்.

கடத்தப்பட்ட அந்த ஆடவர் ஒரு வணிகர் என நம்பப்படுவதாக கூறிய அவர், இக்கடத்தலுக்கான காரணத்தைக் கண்டறிவதற்கு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

இக்கடத்தல் தொடர்பில் 1961ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் 3(1)பிரிவின் கீழ் விசாரணைக்காக கைதான அனைவரும் வரும் 18 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :