ANTARABANGSAMEDIA STATEMENTNATIONALPBT

மனநலப் பிரச்னைக்கு உதவ இலவச ஆலோசக சேவை- மந்திரி புசார்

ஷா ஆலம், அக் 10-  கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய வாழ்க்கை மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஆகியவை மக்களின் மன ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக உள்ளதாக என  மந்திரி புசார் கூறினார்.

ஆகவே, இப்பிரச்னையை புறக்கணிவில்லை என்பதை நிரூபிக்க சிலாங்கூர் அரசு மென்டல் சேஹாட் (சேஹாட்) என்ற இணையம் வழி  இலவச ஆலோசக சேவையை   முன்னெடுத்துள்ளது என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மனநல பிரச்சினைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது  என்பதால் இவ்விவகாரத்தில் மறைமுக உதவி வழங்கப்படுகிறது என அவர் சொன்னார்.

வளமான சமுதாயத்தின் உருவாக்கத்திற்கு ஆரோக்கியமான மனநல அடித்தளம் தேவை. மாநிலத்தை மேம்படுத்துவதில் மாநில அரசு கவனம் செலுத்தும் அம்சங்களில்  இதுவாகும் அடங்கும் என்று அவர்  தனது முகநூல் பதிவில் கூறினார்.

செலங்கா செயலியில் சேஹாட் திட்டம் இணைக்கப்பட்டதானது  சிலாங்கூர் மாநில மக்களின் மனநலப் பிரச்சினைகளைச் சமாளிக்க மாநில அரசு மேற்கொண்டுள்ள சமீபத்திய முயற்சிகளில் ஒன்றாகும் என அவர் சொன்னார்.

சேஹாட் ஆலோசகர்களை நாட 1700-82-7536 அல்லது 1700-82-7537 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். செலங்கா செயலி   அல்லது http://www.drsitimariah.com/ என்ற இணைப்பின் மூலம் சேஹாட் மனநல சேவையைப் பெறலாம் .

Pengarang :