ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

அடைபட்ட கால்வாய்கள் தொடர்பான 70 விழுக்காட்டு புகார்களுக்கு தீர்வு

ஷா ஆலம்,  அக் 12- வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டது தொடர்பில் வாட்ஸ்அப் புலனம்  மூலம் பெறப்பட்ட 362  புகார்களில் பெரும்பாலானவை அல்லது 70 விழுக்காடு தீர்க்கப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் பெறப்பட்ட மீதமுள்ள 30 விழுக்காட்டு புகார்கள் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் அல்லது பிற துறைகளின்  வரம்பிற்கு உட்பட்டதா என்பதைக் கண்டறியும் நடவடிக்கையில் தாங்கள்  ஈடுபட்டு வருவதாக அதன் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

பெறப்பட்ட அனைத்து 362 புகார்களும் எங்களின் அதிகார வரம்பிற்கு உட்டப்படவை அல்ல. ஆனால் அது அது எங்கள் அதிகாரவரம்பிற்கு உட்பட்டதாக  இருந்தால் வழக்கமாக புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சொன்னார்.

தங்களின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட 1.5 மீட்டருக்கும் அதிகமான அகலமுள்ள வடிகால்கள், நீரோடைகள், ஆறுகள் மற்றும் சேதமடைந்த அல்லது உடைந்த வீட்டு வடிகால்கள் போன்ற பல புகார்களை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பெறுகிறது என்று அவர்  கூறினார்.

தஙகள் துறையுடன் தொடர்பில்லாத புகார்கள் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனகங்ள் மற்றும் துறைகளுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.

அடைபட்ட வடிகால்கள் தொடர்பில் 019-274 2824 என்ற எண்ணில் கே.டி.இ.பி.டபள்யு.எம். வாட்ஸ்அப்  மூலம் பொதுமக்கள் புகார்களை அனுப்பலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்

 


Pengarang :