ECONOMYSELANGOR

சபாக் பெர்ணமில் மாநில அரசின் மலிவு விற்பனை- 2,000 கோழிகளை விற்க ஏற்பாடு

சபாக் பெர்ணம், அக் 14- சபாக் பெர்ணம் மாவட்டத்தில் இன்று தொடங்கி இரு தினங்களுக்கு நடைபெறும் ஜெலாஜா சிலாங்கூர்  பென்யாயாங் நிகழ்வையொட்டி அம்மாவட்டத்தில் மாநில அரசின் மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு வருகை புரிவோரின் தேவையை ஈடு செய்யும் வகையில் இன்றும் நாளையும் 2,000 கோழிகளை விற்பனைக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பி.கே.பி.எஸ். வர்த்தக மற்றும் சந்தைப் பிரிவு துணை நிர்வாகி முகமது  ஹஸ்ரி முகமது ஹசான் கூறினார்.

ஸ்டேடியம் சுங்கை பெசாரில் நடைபெறும் இந்த விற்பனையில் கோழி தவிர்த்து 1,200 தட்டு முட்டைகள், அரிசி, சமையல் எண்ணெய் ஆகியவையும் விற்கப்படும் என்று அவர் சொன்னார்.

ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை முன்னிட்டு நடத்தப்படும் மிகப் பெரிய அளவிலான மலிவு விற்பனை இதுவாகும். இந்த திட்டத்தின் வழி அதிகமானோர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கிறோம். ஆகவே, அத்தியாவசியப் பொருள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதை உறுதி  செய்ய விரும்புகிறோம் என்றார் அவர்.

வழக்கமாக இந்த மலிவு விற்பனை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும். ஆனால் இந்த இவ்விரு தினங்களிலும் விற்பனை நேரம் நீட்டிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :