ECONOMYSELANGOR

புகார்களை விரைந்து தீர்க்கும் கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் செயலில் குடியிருப்பாளர்கள் நிம்மதி.

கிள்ளான், அக் 18: கிள்ளான் புக்கிட் ராஜா, தாமான் முத்தியாரா குடியிருப்பை நீண்ட நாட்களாக பாதித்து வந்த  பிரச்சினைகளைத் தீர்க்க கிள்ளான் நகராண்மை கழகம் மேற்கொண்ட விரைவு நடவடிக்கையால் குடியிருப்பாளர்கள் நிம்மதியடைந்தனர்.

வடிகால் பராமரிப்பு, நிலப்பரப்பு, சட்டவிரோத கட்டுமானங்கள், கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் செயல்படாத தண்ணீர் பம்புகள் போன்ற பிரச்சினைகள் நீண்ட காலமாக குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவாக இருந்தது, என்று புக்கிட் முத்தியாரா குடியிருப்போர் சங்க தலைவர் எம்.தேனதயாளன் கூறினார்.

“இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் உடனடியாக தீர்க்கப்பட்டு நாங்கள் வசதியாக இருப்பதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட தரப்பினரைத் தொடர்பு கொண்ட கோத்தா அங்கெரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமியின் முயற்சிகளையும் நாங்கள் பாராட்டுகிறோம் என்றார்.

முன்னதாக, எம்பிகே இன் துணைத் தலைவர் எல்யா மரினி டார்மின், மற்ற துறைகளுடன்  இணைந்து புகார்களைத் விரைவாக தீர்த்து வருவதாகக் கூறினார், இதனால் குடியிருப்பாளர்கள் சுகமான சூழலை அனுபவிக்க முடியும்.

கடந்த ஆகஸ்ட் மாதம், தாமான் முத்தியாராவைச் சேர்ந்த மக்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து புகார் அளித்தனர், அவற்றில் குப்பைகளை முழுமையாக அகற்றுவது, சுத்த பராமரிப்பு, தண்ணீர் வடிகால் பிரச்னைகளுக்கு தீர்வு போன்றவை அடங்கும்.


Pengarang :