ECONOMYPENDIDIKANSELANGOR

143 சீனப் பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்த 90 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டது

ஷா ஆலம், 18 அக்: இந்த ஆண்டு 143 சீனப் பள்ளிகளை பழுதுபார்த்து உள்கட்டமைப்பை மேம்படுத்த மொத்தம் RM90 லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில் 113 சீன தேசிய வகை ஆரம்ப பள்ளிகள், 26 தேசிய வகை இடை நிலைப் பள்ளிகள் மற்றும் மிஷனரி பள்ளிகள் மற்றும் நான்கு சீன தனியார் மேல்நிலைப் பள்ளிகளும் அடங்கும் என்று சுற்றுலா துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

“சிலாங்கூர் மாநில பள்ளி உதவித் திட்டத்தின் மூலம் இந்த முயற்சி மாணவர்களுக்கு உகந்த வசதியையும், கல்வி கற்றலுக்கு ஏற்ற சூழலையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“இந்தப் பள்ளியின் உதவித்தொகை அடுத்த ஆண்டு மீண்டும் திறக்கப்படும். விண்ணப்ப செயல்முறை இந்த ஆண்டு போலவே ஆன்லைன் வழியாக உள்ளது. நிதி ஒதுக்கீட்டின்படி, நியாயமான முறையில் வழங்கப்படும்,” என்றார்.

இங்குள்ள சுல்தான் சலாஹுடின் அப்துல் அஜீஸ் ஷா கட்டிடத்தின் முன் மண்டபத்தில் சீனப் பள்ளிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மே மாதம், டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மாநிலத்தில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மொத்தம் RM2.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

மத்திய அரசின் முழு உதவியைப் பெறாத சமயப் பள்ளிகள், SJKC, SJKT மற்றும் மிஷனரி  பள்ளிகளுக்கும் இம் மானியம் ஒதுக்கப் பட்டுள்ளன.


Pengarang :