ECONOMYSELANGOR

செந்தோசா, ஈஜோக் உள்ளிட்ட 9 இடங்களில் நாளை மலிவு விற்பனை

ஷா ஆலம், அக் 18– சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாடு செய்துள்ள அத்தியாவசியப் பொருட்களின் மலிவு விற்பனை நாளை ஒன்பது மாநில சட்டத் தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

தெபுக் முஃப்ராட் (அபாக்), எம்.பி.கே.கே. பத்து கம்போங் ஈஜோக் பத்து 8 (கோல சிலாங்கூர்) மற்றும் கந்தாய் பெர்மாய் பார்க் (செமினி) ஆகிய இடங்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த மலிவு விற்பனை நடைபெறும்.

இது தவிர, பங்சாபுரி பெரெம்பாங் இண்டா, (உலு கிள்ளான்), பிளாட் 610 ஜாலான் பாண்டன் இண்டா (தெராத்தாய்) மற்றும் லெங் எங் தியான் கியூ ஓங் தை தே கோயில் (கம்போங் துங்கு) ஆகிய இடங்களிலும் இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரினா சதுக்கம் புக்கிட் காப்பார் (செமெந்தா), செந்தோசா இரவு சந்தை வளாகம் (செந்தோசா) மற்றும் சுங்கை சீடு தேசிய வகை பள்ளி மைதானம் (பந்திங்) ஆகியவற்றிலும் விற்பனை நடைபெறுகிறது.

கடந்த செப்டம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை நடைபெறும் இந்த மக்கள் மலிவு விற்பனைத் திட்டத்தில் சந்தையை விட 30 சதவீதம் குறைவான விலையில் சமையல் பொருட்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு பொதுமக்களுக்கு கிட்டும்.

இந்த மலிவு விற்பனையில் நடுத்தர கோழி 10.00 வெள்ளி விலையிலும் இறைச்சி 10.00 வெள்ளிக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் விற்கப்படும்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  விற்பனையில் மீன் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் மற்றும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

அனைத்து 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 160 இடங்களில் மலிவு விற்பனையை நடத்த மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ். சமூக ஊடகங்கள் வாயிலாக அல்லது https://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் வாயிலாக மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


Pengarang :