ECONOMYMEDIA STATEMENTNATIONALSUKANKINI

புத்ராஜெயாவில் 10,000 பேர் அமரக்கூடிய ஏ.எஃப்.சி விளையாட்டரங்கம் நிர்மாணிக்கப்படும்

கோலாலம்பூர், அக் 19– அனைத்துலக கால்பந்து சம்மேளனத்தின் (பீஃபா) ஒத்துழைப்புடன் ஆசியா கால்பந்து சங்க கூட்டமைப்பு (ஏ.எஃப்.சி.) புத்ராஜெயாவில் 10,000 பேர் அமரக்கூடிய அதிநவீன விளையாட்டரங்கை நிர்மாணிக்கவுள்ளது.

ஸ்டேடியம் ஏ.எஃப்.சி. என அழைக்கப்படும் இந்த அரங்கம் புக்கிட் ஜாலில் உள்ள ஏ.எஃப்.சி. தலைமையகத்திலிருந்து 30 கிலோமீட்டர்  தொலைவில் 6.172 ஹெக்டர் நிலப்பரப்பில் அமையவிருக்கிறது.

பிரமுகர்களுக்கான பிரதான மேடை, ரசிகர்களுக்கான இருக்கைகள், நிர்வாக அலுவலம், நிலவறை கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை இந்த அரங்கம் கொண்டிருக்கும்.

இந்த அரங்கின் தரைப்பகுதி 580,000 சதுரஅடி பரப்பளவைக் கொண்டிருக்கும். இது பத்தாயிரம் இருக்கைகளைக் கொண்டிருக்கும் என்பதோடு பீஃபாவின் தர நிர்ணயத்திற்கு ஏற்ற திடலும் அமையப் பெற்றிருக்கும்.

இந்த அரங்கின் கட்டுமானத்திற்கான  நிதி பீஃபாவின் ஒதுக்கீட்டிலிருந்து பெறப்படும் என்றும் அரங்கின் கட்டுமானத்திற்கான நிலம் மற்றும் இதர தளவாட வசதிகளை மலேசிய அரசாங்கமும் மலேசிய கால்பந்து சங்கமும் ஏற்பாடு செய்து தரும் என்று ஏ.எஃப்.சி. கூறியது.


Pengarang :