ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

கிள்ளான் ஆறு சீரமைப்பு- கெர்பாங் மெரிதிம் சிலாங்கூர் திட்டத்திற்கு விருது

ஷா ஆலம், அக் 20– புரோஜெக்ட் கெர்பாங் மெரிதிம் (எஸ்.எம்.ஜி.) திட்டத்திற்கு 2022 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல், சமூகவியல் மற்றும் நிர்வாகப் பிரிவில் சிறந்த நிறுவன விருது வழங்கப்பட்டுள்ளது.

கிள்ளான் ஆற்றை மதிப்புமிக்க சொத்தாகவும் நீர் வளமாகவும் உருவாக்கும் தங்களின் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த விருது விளங்குகிறது என்று அந்த எஸ்.எம்.ஜி. திட்டத்தை மேற்கொண்டு வரும் லண்டாசான் லுமாயான் சென்.பெர்ஹாட் நிறுவனம் கூறியது.

பிரசித்தி பெற்ற நிறுவனங்களான எஃப்.ஜி.வி. ஹோல்டிங்ஸ் பெர்ஹாட், ஈக்கோ வேர்ல்ட் டெவெலப்மெண்ட் குரூப், யு.இ.எம். எட்ஜென்தா மற்றும் மா சிங் பெர்ஹாட் ஆகியவற்றுடன் நாங்களும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டது குறித்து பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம் என அந்நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

நீடித்த மேம்பாடு மட்டும் சிறந்த உலகை உருவாக்கி விடாது. சமுதாயத்தின் நீடித்த மேம்பாடும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும் என அந்நிறுவனம் கூறியது.

சீரான கண்காணிப்பு முறை, அதிநவீன இண்டர்செப்டர் குப்பை அகற்றும் இயந்திரம் மூலம் துப்புரவு பணியை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் வாயிலாக கிள்ளான் ஆற்றைச் சுத்தப்படுத்தி மீட்சிபெறச் செய்யும் நடவடிக்கையில் எஸ்.எம்.ஜி. நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.


Pengarang :