ECONOMYSELANGOR

ஓய்வூதியம் கிடைக்காத முன்னால் ராணுவ வீரர்களுக்கு எம்பிஐ RM300 நன்கொடை

பந்திங், அக்டோபர் 20: சிலாங்கூரிலுள்ள ஓய்வூதியம் பெறாத 39 ராணுவ வீரர்கள்  இன்று சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐயிடம் இருந்து RM300 நன்கொடையாகப் பெற்றனர்.

இந்த நன்கொடையானது நாட்டிற்கு சேவையளித்தவர்களுக்கு மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்கான அடையாளம் என்று அதன் நிறுவன சமூகப் பொறுப்பு தலைவர் கூறினார்.

“இந்த பண நன்கொடை சிலாங்கூர் அரசாங்கம் , உதவி தேவைபடுபவர்களை ஓரம் கட்டவில்லை என்பதின் அடையாளமாகும், மேலும் இந்த உதவி முன்னாள் வீரர்களின் இன்னல்களுக்கு சிறிய நிவாரணமே என்றது.

“உதவி பெறுபவர்கள் குறைந்த வசதி கொண்ட குடும்பத்தை சார்ந்தவர்கள்” என்று இங்குள்ள கோலா லங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நன்கொடை வழங்கும் விழாவில் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

இதற்கிடையில், கோலா லங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் முகமது அஃபிக் முகமது துனிமான் சங்கத்தின் உறுப்பினர்களின் இக்கட்டுகளை  துடைக்க  உதவியதற்கு எம்பிஐக்கு நன்றி தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை, கோலா லங்காட்டில் வசிக்கும் அவர்களுக்கு நன்கொடை கிடைத்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றார்.

“ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம், இந்த உதவி அவர்களின் தியாகத்தை மதிக்கும் வழிகளில் ஒன்றாகும், மேலும் இந்த குழுவிற்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :