ECONOMYMEDIA STATEMENTNATIONAL

எட்டு ஆண்டுகளில் சிறைவாசிகள் எண்ணிக்கையை மூன்றில் இரு மடங்காக குறைக்க மலேசியா இலக்கு

புதுடில்லி, அக்டோபர் 26 - சமூகத் திருத்தங்களின் வாயிலாக அடுத்த எட்டு ஆண்டுகளில் சிறைவாசிகளின் எண்ணிக்கையை மூன்றில் இரண்டு பங்காகக் குறைக்க மலேசியா இலக்கு வைத்துள்ளது. 

சமூகத் திருத்தங்களில் அதிக கவனம் செலுத்துவது, சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது மற்றும் கடுமையான குற்றங்கள் அல்லாத குற்றவாளிகளின் மறுவாழ்வை மேம்படுத்துவது ஆகியவை மலேசியாவின் திட்டங்களில் ஒரு பகுதியாகும்
என்று மலேசிய சிறைத் துறை தலைமை ஆணையர் டத்தோ நோர்டின் முகமது தெரிவித்தார்.
எதிர்காலத்தில், அதாவது 2030 ஆம் ஆண்டுக்குள் தண்டனைக் கைதிகளில் மூன்றில் இரண்டு பகுதியினர் சமூகத் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்களைத் திருத்தம் செய்யும் வசதிகள் உள்ளன என்று புது டில்லியில் பெர்னாமாவுக்கு அளித்த  பேட்டியில் நோர்டின் கூறினார்.

மலேசியாவில் நிகழும் குற்றங்களில்  30 விழுக்காடு  தீவிரமானவையாகவும்  வன்முறை நிறைந்ததாகவும் உள்ளன என அவர் குறிப்பிட்டார்.

சிறைக்கு வெளியே புனர்வாழ்வு வாய்ப்புகள் இல்லாத முன்னாள் கைதிகளின் மறுசீரமைப்பு விகிதம் 15 சதவீதமாக உள்ளது என்றும் நோர்டின் கூறினார்.

சமூகத் திருத்தங்களில் அதிக கவனம் செலுத்துவது எங்களின் எதிர்கால இலக்காக உள்ளது. இதன் மூலம் முன்னாள் கைதிகள் மீண்டும் மீண்டும் சிறை வருவதைக் குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்

Pengarang :