ECONOMYMEDIA STATEMENT

பிரமிட் முதலீட்டுத் திட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை- எழுவர் கைது, வெ.10 லட்சம் பறிமுதல்பிரமிட் முதலீட்டுத் திட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை- எழுவர் கைது, வெ.10 லட்சம் பறிமுதல்

கோலாலம்பூர், அக் 26- பிரமிட் முதலீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு தைவானிய பிரஜை உள்பட எழுவரை உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன் கிழமை பினாங்கு, ஜெலுத்தோங்கில் உள்ள வணிக மையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த “ஓப் ரிவார்ட்“ நடவடிக்கையில் அந்த எழுவரும் கைது செய்யப்பட்டதாக அமைச்சின் அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் அஸ்மான் ஆடாம் கூறினார்.

பினாங்கு மற்றும் கெடாவில் உள்ள அந்த சந்தேகப் பேர்வழிகளின் குடியிருப்புகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தங்கள் முதலீட்டுத் திட்டத்தை செயலிகள் மற்றும் இணையம் வாயிலாக பொதுமக்களிடம் பிரபலப்படுத்தும் நடவடிக்கையில் இக்கும்பல் அண்மைய சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த முதலீட்டுத் திட்டம் தொடர்பான மேல் விசாரணைக்காக ஆவணங்கள், கணினிகள், கைபேசிகள் உள்ளிட்ட பொருள்களைத் தாங்கள் பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

மேலும், ஒன்பது ஆடம்பரக் கார்கள், விலைமதிப்புள்ள கைப்பைகளும் கைப்பற்றப்பட்டதோடு மொத்தம் 967,720.20 வெள்ளி சேமிப்பைக் கொண்ட 38 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :