ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிப்பாங்கில் வார இறுதியில் மலிவு விற்பனை மற்றும் இலவச மருத்துவப் பரிசோதனை

ஷா ஆலம், அக் 26- இம்மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில்  சிப்பாங், கே.ஐ.பி. சென்ட்ரலில் நடைபெறும்  ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி அத்தியாவசிய பொருள்களை குறைந்த விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பு சுற்றுவட்டார மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

“மேன்மையான வாழ்வுக்கான உத்தரவாதம்“ எனும் கருப்பொருளில் இங்கு நடைபெறும் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மலிவு விற்பனை நடைபெறுகிறது. இது தவிர, சிலாங்கூர் சாரிங் திட்டத்தின் வாயிலாக இலவச மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பும் இங்கு வழங்கப்படும்.

இந்த நிகழ்வில் கலைநிகழ்ச்சிகள், வீரதீர சைக்கிளோட்டப் போட்டி, அதிர்ஷ்டக் குலுக்கு, அம்பு எறியும் போட்டி, மக்கள் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்டுத்தும் நோக்கிலான இந்த நிகழ்வை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக  தொடக்கி வைப்பார்.

இத்தகைய மக்கள் நலத் திட்ட அறிமுக நிகழ்வுகள் சபாக் பெர்ணம், கிள்ளான், அம்பாங் ஜெயா, கோல லங்காட், பெட்டாலிங் ஜெயா, கோல சிலாங்கூர், பத்து கேவ்ஸ் ஆகிய இடங்களில் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. 

 


Pengarang :