ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நிக் அஜிஸ் மகன் கெஅடிலான் சார்பில் பேராக்கில் போட்டி- அன்வார் தகவல்

பெட்டாலிங் ஜெயா, அக் 26- வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் கெஅடிலான் கட்சி சார்பில் நிக் ஓமார் நிக் அப்துல் அஜிஸ் போட்டியிடுவார் என அக்கட்சி நேற்று அறிவித்தது.

பாஸ் கட்சியின் ஆன்மிகத் தலைவர் டத்தோ நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்டின் புதல்வரான நிக் ஓமார் பேராக் மாநிலத்திலுள்ள ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நிக் ஓமார் பேராக்கில் போட்டியிடுவார். அம்மாநிலத்தில் கெஅடிலான் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின பெயர் பட்டியல் வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று இங்குள்ள கெஅடிலான் கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

யாயாசான் டாக்வா இஸ்லாமியா மலேசியா இயக்கத்தின் முன்னாள் தலைவரான நிக் ஓமார்,  அல்-அஸார் பல்கலைக்கழகத்தில் உசுலடின் ஹடித் துறையிலும் ஜோர்டான் யார்மோக் பல்கலைக்கழகத்தில் ஷரியா துறையிலும் பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார்.

இந்த செய்தியாளர் கூட்டத்தில் கெஅடிலான் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள அறு வேட்பாளர்களின் பெயர்களையும் அன்வார் அறிவித்தார்.

  1. டத்தோ ஜைனால் அஸ்மான் அபு செமான்- பொதுச் சேவைத் துறையின் முன்னாள் உயர் அதிகாரி
  2. டத்தோ டாக்டர் ஹசான் பாஸ்ரி அவாங் மாட் டஹான்- சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உதவி வேந்தர்
  3. டாக்டர் நோர்ஷியா மைடின் அப்துல் அஜிஸ்- மலாயா பல்கலைக்கழக மருத்துவத் துறையின் முன்னாள் தலைமை விரிவுரையாளர்
  4. சைபுல்யாசான் யூசுப்- சிலாங்கூர் ஸக்கத் வாரியத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி
  5. ஜூபிதிரி ஜோஹா- மலேசிய இளைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் 
  6. ஃபாத்தின் அமிலினா ஃபாஸ்லி- இளம் மாணவர் வேட்பாளர்

Pengarang :