ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி உலு கிளாங்கில் 4,500 பேர் பயன்

ஷா ஆலம், அக் 27- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான ஜெலாஜா
ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி உலு கிளாங்
தொகுதியைச் சேர்ந்த சுமார் 4,500 பேர் பயன் பெற்றனர்.
  சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும் இந்த
திட்டத்திற்கு தொகுதி மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து
வருவதாக உலு கிளாங் சட்டமன்ற சேவை மையத்தின் நிர்வாகி முகமது
ஹெல்மிஸான் அப்துல் கரீம் கூறினார்.
இத்தொகுதியில் 15 முறை இந்த மலிவு விற்பனைத் திட்டம்
நடத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு பொதுமக்கள் அளித்து வரும் ஆதரவு
பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது. ஒவ்வொரு முறையும் 1.00 மணிக்கு
முன்னதாகவே அனைத்துப் பொருள்களும் விற்றுத் தீர்ந்து விடுகின்றன
என்று அவர் குறிப்பிட்டார்.
பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை
வாங்குவதற்கு ஏதுவாக இத்தொகுதியில் வரும் அக்டோபர் 31, செப்டம்பர்
1 மற்றும் 2ஆம் தேதிகளில் மூன்று முறை மலிவு விற்பனை
நடைபெறவுள்ளதாக அவர் சொன்னார்.
இதனிடையே, நேற்று பாசீர் பெனாம்பாங், டேவான் ஒபேராவில் மலிவு
விற்பனை ஆரம்பித்த ஒரு மணி 15 நிமிடங்களில் அனைத்துப்
பொருள்களும் விற்றுத் தீர்ந்ததாக பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர்
ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.
இந்த மலிவு விற்பனையில் பொருள்களை வாங்குவதற்காக பொது மக்கள்
காலை 9.00 மணி முதல் வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். 90
நிமிடங்களில் அனைத்து பொருள்களும் விற்கப்பட்டு விட்டன. நேற்று
மட்டும 500 கோழிகள் இங்கு விற்கப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
இந்த விற்பனை வரும் சனிக்கிழமை பெர்மாத்தாங் தொகுதியிலுள்ள
கம்போங் பெஸ்தாரி ஜெயாவில் மீண்டும் நடைபெறும் என்றும் அவர்
கூறினார்.

Pengarang :