ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

அடுக்குமாடி குடியிருப்பின் தண்ணீர் தொட்டி உடைந்தது- ஆறு வாகனங்கள் சேதம்

சிப்பாங், அக் 28 - இங்குள்ள தாமான் மாஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மேல் 18.3 மீட்டர் (60 அடி) உயரத்தில் வைக்கப்பட்டிருந்த  தண்ணீர் தொட்டி உடைந்து சிதறியதில் 6 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.

 தண்ணீர் தொட்டியின் உடைந்த பாகங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு கீழே உள்ள வாகனங்கள் மீதும் விழுந்ததாக சிப்பாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் கமாருள் அஸ்ரான் வான் யூசுப் கூறினார்.

எனினும்  இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால் சொத்துகளுக்கு சேதம் சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் காப்பீட்டு கோரிக்கைகளுக்காக இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட 172 வீடுகளுக்கு சுத்தமான தண்ணீரை வழங்க பென்குருசன் ஏர் சிலாங்கூர் சென்.
பெர்ஹாட் (சிலாங்கூர் ஏர்) நீர் டேங்கர் லோரிகளை அனுப்பியதாக  என்று அவர் நேற்றிரவு  வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று அடுக்குமாடி குடியிருப்பு தண்ணீர் தொட்டி உடைந்ததால் குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து நீர்  அருவி போல் கொட்டும் காட்சி  வலைதளங்களில் வைரலானது.

Pengarang :