ECONOMYMEDIA STATEMENTNATIONALSUKANKINI

பிரஞ்சு பொது பூப்பந்துப் போட்டி- இறுதிச் சுற்றுக்கு பியர்லி டான்-எம். தினா ஜோடி முன்னேற்றம்.

கோலாலம்பூர், அக். 30 - தேசிய மகளிர் பூப்பந்து அணியின்  முன்னணி இரட்டையர்களான  பியர்லி டான்-எம். தினா ஜோடி, 2022  ஃபிரெஞ்சு பொதுப் பூப்பந்துப் போட்டியின் இறுதிச் சுற்றில் நுழைந்துள்ளனர்.

இதன் வழி உலகின் மிகப்பெரிய பூப்பந்து சம்மேளனப் போட்டியில் வெற்றியை அடைவதற்கான வாய்ப்பை அவர்கள் பெற்றுள்ளனர்.

பர்மிங்காம் 2022 காமன்வெல்த் வெற்றியாளர்களான பியர்லி-எம். தினா ஜோடி  நேற்றிரவு பாரிஸில் உள்ள ஸ்டேட் பியர் டி கூபெர்டினில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் புதிய ஜோடியான பேக் ஹா நா-லீ சோ ஹீயை 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.

தென் கொரிய ஆட்டக்காரரான ஹீ 2021 உலக சாம்பியன்ஷிப் பூப்பந்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றவராவார். இதன் வழி இந்த ஜோடி உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

உலகத் தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள பியய்லி டான்- எம்.தினா ஜோடி இன்று  உலகின் 7ஆம் நிலை ஜோடியான ஜப்பானின் மயூ மாட்சுமோட்டோ-வகானா நாகஹாராவை எதிர்கொள்கிறது.

 அரையிறுதி ஆட்டத்தில் பியர்லி டான்-எம்.தினா அணி  21-14, 25-23 என்ற செட் கணக்கில் ஜப்பானிய  வீரர்களான யூகி புகுஷிமா-சயாகா ஹிரோட்டாவை வீழ்த்தியது.

கடந்த வெள்ளியன்று நடந்த காலிறுதிச் சுற்றில் பியர்லி-தினா ஜோடி 15-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பானின் உலகின் மூன்றாம் நிலை இரட்டையர்களான சிஹாரு ஷிடா-நமி மட்சுயாமாவை வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

Pengarang :