ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோத்தா ராஜா தொகுதியில் மாட் சாபு மீண்டும் போட்டி- தித்தி வங்சா செல்கிறார் காலிட் சமாட்

ஷா ஆலம், அக் 30- வரும் 15வது பொதுத் தேர்தலில் அமானா கட்சியின் தலைவர் முகமது சாபு கோத்தா ராஜா தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார்.

அதே சமயம் கடந்து மூன்று தவணைகளாக ஷா ஆலம் தொகுதியை தன் வசம் வைத்திருக்கும் காலிட் சமாட்  கூட்டரசு பிரதேசத்தின் தித்தி வங்சா தொகுதிக்கு மாற்றலாகிறார். பெர்சத்து கட்சியின் ஸ்ரீ காண்டி தொகுதி தலைவரான டத்தோ ஸ்ரீ ரீனா முகமது ஹருண் இத்தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

அமானா கட்சியின் தொடர்பு பிரிவு இயக்குநரான காலிட்,  கடந்த 14வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் டாக்டர் முகமது ஸூடி மர்சுக்கி மற்றும் தேசிய முன்னணியின் அஸாரி ஷாரியை 33.849 வாக்குகள் பெரும்பான்மையில் ஷா ஆலம் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

இப்பொதுத் தேர்தலில் அமானா கட்சி 54 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கூறினார். 

கடந்த பொதுத தேர்தலை விட இத்தேர்தலில் கூடுதலாக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். இம்முறை 35 விழுக்காடு கூடுதல் தொகுதிகளைப் பெற்றுள்ளோம். வேட்பாளர்களில் எழுவர்  பெண்களாவர் என அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் அமானா கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் வருமாறு-

சபாக் பெர்ணம்- சம்சுல் மாஹ்ரிப் இஸ்மாயில்

கோல சிலாங்கூர்- டாக்டர் ஜூல்கிப்ளி அகமது

உலு லங்காட்- முகமது சானி ஹம்சான்

ஷா ஆலம்- அஸ்லி யூசுப்

கோத்தா ராஜா- முகமது சாபு

சிப்பாங்- ராஜ் முன்னி அலியாஸ் அய்மான் அதிரா 

 


Pengarang :