Dato’ Menteri Besar Selangor Dato’ Amirudin Shari melawat ke reruai jualan ketika Majlis penutup Karnival Usahawan I-Seed sempena Deepavali 2022 di Dataran Chetty, Klang pada 9 Oktober 2022. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

நாளை ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், நவ 1- அத்தியாவசிய உணவுப் பொருள்களை சந்தையை விட மலிவான விலையில் விற்பனை செய்யும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டம் நாளை மேலும் ஒன்பது இடங்களில் நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த விற்பனை சுங்கை பாஞ்சாங், குவாங், சுங்கை துவா, ரவாங், புக்கிட் அந்தாராபங்சா, உலு கிளாங், பாண்டான் இண்டா, கோம்பாக் செத்தியா மற்றம் சுங்கை காண்டிஸ் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ளது.

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் இந்த விற்பனையில் நடுத்தர கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் விற்கப்படும்.

இவை தவிர செலாயாங் மற்றும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் வாங்குவதற்குரிய வாய்ப்பு இந்த விற்பனைத் திட்டத்தில் கிட்டும்.

வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் அவதியுறும் மக்களுக்கு உதவும் நோக்கில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அமல்பட்ட இந்த திட்டத்தின் வாயிலாக இதுவரை 80,000 பேர் பயனடைந்துள்ளனர்.


Pengarang :