ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

பாரிசான், பெரிக்கத்தான் அரசுகள் மீது 60 விழுக்காட்டினர் அதிருப்தி- நாடு தவறான தடத்தில் செல்வதாக கவலை

ஷா ஆலம், நவ 4- நடப்பு மத்திய அரசாங்கம் மீது 60 விழுக்காட்டு வாக்காளர்கள் அதிருப்தி கொண்டுள்ள வேளையில் நாடு தவறான தடத்தை நோக்கி பயணிப்பதாக 72 விழுக்காட்டினர் கருதுகின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பக்கத்தான் ஹராப்பான் அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு  பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கட்சிகளின் ஒத்துழைபுடன் புதிய அரசாங்கம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

கடந்த மாதம் 19 முதல் 28 வரை மொத்தம் 1,209 பேரிடம் இந்த கருத்துக் கணிப்பில் இந்த தரவுகள் கிடைத்துள்ளன. இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 74 விழுக்காட்டினர் நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குவதாக கருதுகின்றனர்


Pengarang :