ECONOMYMEDIA STATEMENTNATIONAL

5வது பொதுத் தேர்தல்- இன்று வரை 4,326 வேட்பு மனுக்கள் விற்பனை

புத்ராஜெயா, நவ 4- பதினைந்தாவது பொதுத் தேர்தலையொட்டி நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்திற்கு போட்டியிடுவதற்கான 4,326 வேட்பு மனுக்கள் இதுவரை நாடு முழுவதும் விற்பனையாகியுள்ளன.

அவற்றில்  நாடாளுமன்றத்திற்கு 3,036 வேட்பு மனுக்களையும் சட்டமன்றத்திற்கு 1,390 வேட்புமனுகளையும் வேட்பாளர்கள் வாங்கியுள்ளதை தேர்தல் ஆணையத்தின் தரவுகள் காட்டுகின்றன.

நாடாளுமன்றத்தைப் பொறுத்த வரை சபாவில் மிக அதிகமாக அதாவது 716 வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்த நிலையில் பேராக் (326), சிலாங்கூர் (266), பினாங்கு (219), கோலாலம்பூர்/புத்ராஜெயா (163), கெடா (150), பகாங் (144), திரங்கானு (118), சரவா (100), மலாக்கா (73) ஆகிய மாநிலங்களில் உள்ளன.

பெர்லிஸ் மாநிலத்தில் மூன்றே நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் அங்கு 52 வேட்பு மனுக்கள் வாங்கப்பட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட நெகிரி செம்பிலானில் 24 வேட்பு மனுக்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன.

சட்டமன்றத்தைப் பொறுத்த வரை பேராக் மாநிலத்தில் 654 வேட்புமனுக்களும்  பகாங்கில் 422 வேட்புமனுக்களும் பெர்லிசில் 153 வேட்புமனுக்களும்  வாங்கப்பட்டுள்ளன.


Pengarang :