ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மருந்துக்கு “மாற்றாக தயாரிப்புகள் மற்றும் உணவை, சுகாதார அமைச்சகம் பரிந்துரைப்பதில்லை

கோலாலம்பூர், நவ 7: மருந்துகளுக்கு பதில் எந்தப் தயாரிப்புகள் அல்லது உணவையோ  மாற்றாக பரிந்துரைப்பதில்லை என சுகாதார அமைச்சகம் (கேகேஎம்) வலியுறுத்துகிறது.

ஒரு நிறுவனம் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க, இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கும் தனது நிறுவன பொருட்களை சுகாதார அமைச்சகம்  பரிந்துரைப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வதாக வெளியான ஒரு இணைய செய்தி மீது இன்று தனது பேஸ்புக் வழி தெளிவு படுத்தியது.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கை பொறுப்பற்றது மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்திற்காக http://myhealth.gov.my என்ற போர்டல் இணையதளத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட படம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

“பொதுமக்கள் எளிதில் ஏமாந்து விடக்கூடாது என்றும், அதன் உண்மை தெரியாத அறிக்கைகள் மற்றும் போர்டல்களால் பாதிக்கப்படக்கூடாது என்றும் சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொள்கிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :