ECONOMYMEDIA STATEMENTSELANGOR

கோல லங்காட் நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பெரிக்காத்தான் சேஷனலுக்கும் இடையே கடும் போட்டி.

பந்திங்.நவ. 7- கோல லங்காட் நாடாளுமன்றத்துக்கு பக்காத்தான் ஹராப்பான் ( நம்பிக்கை கூட்டணி ) சார்பில் மணிவண்ணன் கோவிந்தசாமியும் , பெரிக்காத்தான் நேஷனல் ( தேசிய கூட்டணி ) சார்பில் பாஸ் கட்சியை சேர்ந்த சிஜாங்காங் சட்டமன்ற உறுப்பினர் முகமது யுனோசுக்குமிடையே தான் பலத்த போட்டி நிலவுகிறது.

இத்தொகுதில் தேசிய முன்னணி வேட்பாளர் மோகனா முனியாண்டி 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். யுனோஸ் 3வது  முறையாக கோல லங்காட் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சிஜாங்காங சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தற்போது கோல லங்காட் நாடாளுமன்றத்துக்கு போட்டியிடுவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆகையால் கோல லங்காட் தொகுதியில் மணிவண்ணனுக்கும் யுனோசுக்குமிடையே போட்டி என்று கணிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய  பி.கே.ஆர் கட்சி களத்தில் இறங்கியுள்ளது என்று அக்கட்சியின் தொகுதித் தலைவர் அரிதாஸ் சூளுரைத்தார்.

நேற்று பந்திங் வட்டாரத்தில் உள்ள இளைஞர்களுக்கு காற்பந்து விளையாட காற்பந்துகள் மற்றும் ஜெர்சி சட்டைகளும் வழங்கிய நிகழ்ச்சிக்கு பின்னர் அரிதாஸ் இவ்வாறு கூறினார்.

தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மோகானா முனியாண்டி வெளியில் இருந்து இறக்கப் பட்டதால் உள்ளூர் ம.இ.கா. ஆதரவாளர்கள் ஆதரவு கிடைக்காது. ஆகையால் இன்றைய நிலையில் இத்தொகுதி தேர்தல் களத்தில் தேசிய முன்னணி 3 வது இடத்துக்கு தள்ளப் பட்டு விட்டது.

நம்பிக்கை கூட்டணியின் வெற்றியை உறுதி படுத்த பந்திங் மற்றும் மோரிப் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும்  களத்தில் இறங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளனர். இத்தொகுதியில் உள்ள சீனர்களின் பேராதரவை திரட்டுவதில் ஜ.செ.காவை சேர்ந்த பந்திங் சட்டமன்ற உறுப்பினர்  லௌ இ சாங் களத்தில் குதித்துள்ளார். இதே போல் அமான கட்சியை சேர்ந்த மோரிப் சட்டமன்ற உறுப்பினரும் மலாய்க்காரர்கள் ஆதரவை திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

பி.கே.ஆர், ஜ.செ.க., மற்றும் அமான கட்சிகளின் பேராதரவுடன் குறைந்தது 30,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு வைத்து களத்தில் இறங்கியுள்ளோம் என்று  கோல லங்காட் பி.கே.ஆர் தொகுதி தலைவரான அரிதாஸ் தெரிவித்தார்.

செய்தி சுப்பையா சுப்ரமணியம்


Pengarang :