தெலுக் வட்டாரத்தில் பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் நடவடிக்கை அறையை திறந்து வைத்து உரை நிகழ்துகிறார்
ANTARABANGSAMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

பாஸ் கட்சியின் சிஜாங்காங் கோட்டைக்குள் பக்காத்தான் ஹராப்பான் ஊடுருவல்.

தெலுக்.நவ.7- கோல லங்காட் நாடாளுமன்ற தொகுதிக்குள் உள்ள சிஜாங்காங்   சட்டமன்றத்துக்குள் மணிவண்ணன் ஊடுருவல். பாஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் தெலுக் வட்டாரத்தில் பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் நடவடிக்கை அறையை திறந்து வைத்தார்.

ஏறக்குறைய 50 பேர் கொண்ட இந்த தேர்தல் நடவடிக்கை அறை நேற்று முன் தினம் இரவு 10.00 மணியளவில் தொடக்கி வைத்தார். இந்த சிஜாங்காங் சட்டமன்றம் கடந்த 3 தவணையாக பாஸ் கட்சியின் கோட்டையாக விளங்கியது. கடந்த பொதுத் தேர்தலில்  பாஸ் சிலாங்கூரில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிட்டது. எல்லாத் தொகுதிகளிலும் மண்ணை கவ்விய பாஸ் கட்சி சிஜாங்காங் தொகுதியில் பெர்சத்து கட்சி வேட்பாளரை தோற்கடித்து தொகுதியை தற்காத்துக் கொண்டது.

இம்முறை இந்த சிஜாங்காங் சட்டமன்ற உறுப்பினர் முகமது யுனோஸ் கோல லங்காட் நாடாளுமன்ற தொகுதிக்கு பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

பாஸ் கட்சியின் வேட்பாளரை தோற்கடிப்போம் என்று சூளுரைத்து களத்தில் குதித்துள்ளார் மணிவண்ணன். தெலுக் வட்டாரத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற பி.கே.ஆர் தலைவர்கள் முருகு சரவணன், ஆறுமுகம் குப்பன், தர்மராஜ் ஆகியோர் இந்த தேர்தல் நடவடிக்கை அறையை தொடங்கியுள்ளனர்.

இவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் யுனோஸ் வெற்றிக்காக பாடுபட்டனர். ஆனால் கடந்த பொதுத் தேர்தலுக்கு பின்னர் பாஸ் மன்றத்தை கலைத்து விட்டு பி.கே.ஆர் கட்சியில் இணைந்தனர். தற்போது பாஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படுகின்ற சிஜாங்காங் தொகுதி வாக்காளர்கள்  நம்பிக்கை கூட்டணி பக்கம் கொண்டு வந்து மணிவண்ணன் வெற்றியை உறுதி செய்ய தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விரைவில் ஒரு மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தை கூட்ட இருப்பதாக ஆறுமுகம் மேலும் தெரிவித்தார். இந்த தேர்தல் நடவடிக்கை அறை காலை 9.00 மணி முதல் இரவு 10.00 வரை தேர்தல் வேலைகளை கவனிக்க வாக்களிப்பு நாள் வரையில் செயல்படும் என்று தர்மராஜ் தெரிவித்தார். இந்த தேர்தல் நடவடிக்கை அறையை அமைக்க முருகு சரவணனும், கோல லாங்காட் நகராண்மை கழக உறுப்பினர் இத்தொகுதியின் உதவித் தலைவருமான பன்னீர் செல்வமும் முக்கிய காரணம் என்று தர்மராஜ் தெரிவித்தார்


Pengarang :