ECONOMYSELANGOR

இன்று மேலும் ஒன்பது இடங்களில் மலிவு விற்பனை

ஷா ஆலம், நவ 10- இன்று காலை 10.00 மணி தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை மேலும் ஒன்பது இடங்களில் அத்தியாவசிய உணவுப் பொருள் மலிவு விற்பனை நடைபெறவுள்ளது.

இந்த ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டம் சுங்கை பாஞ்சாங், சுங்கை பூரோங், புக்கிட் மெலாவத்தி, சுங்கை துவா,கோம்பாக் செத்தியா, உலு கிள்ளான் ஆகிய தொகுதிகளில் நடைபெறும்.

இவை தவிர்த்து, புக்கிட் அந்தாரா பங்சா, புக்கிட் லஞ்சான், பாண்டான் இண்டா ஆகிய தொகுதிகளிலும் இந்த மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 6 முதல் நடைபெறும் இந்த மக்கள் மலிவு விற்பனைத் திட்டத்தில் சந்தையை விட 30 சதவீதம் குறைவான விலையில் சமையல் பொருட்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு பொதுமக்களுக்கு கிட்டும்.

இந்த மலிவு விற்பனையில் நடுத்தர கோழி 10.00 வெள்ளி விலையிலும் இறைச்சி 10.00 வெள்ளிக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் விற்கப்படும்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  விற்பனையில் மீன் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் மற்றும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

அனைத்து 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 160 இடங்களில் மலிவு விற்பனையை நடத்த மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

பொதுமக்கள் பி.கே.பி.எஸ். சமூக ஊடகங்கள் வாயிலாக அல்லது https://linktr.ee/myPKPS என்ற இணைப்பின் வாயிலாக மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


Pengarang :