ECONOMYNATIONALSUKANKINI

சுல்தான் அஸ்லான் ஷா கிண்ணத்தை வென்ற தேசிய ஹாக்கி குழுவுக்கு வெகுமதி

கோலாலம்பூர், நவ 12- சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியின் 39 ஆண்டு கால வரலாற்றில் முதன் முறையாக அக்கிண்ணத்தை வென்ற தேசிய ஹாக்கி அணிக்கு (ஸ்பீடி டைகர்ஸ்) வெகுமதி காத்திருக்கிறது.

இந்த சாதனையை நிகழ்த்திய பயிற்றுநர் ஏ.அருள் செல்வராஜ் தலைமையிலான தேசிய அணியை பெரிதும் பாராட்டிய மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால், சாதனை புரிந்த இக்குழுவுக்கு வெகுமதி வழங்கப்படும் என்றும் எனினும் இதன் தொடர்பான பரிந்துரை சம்ளேனத்தின நிர்வாக வாரியத்திடம் முன்வைக்கப்படும் என்றும் சொன்னார்.

இந்த பரிந்துரையை நிர்வாக வாரியம் ஏற்றுக் கொண்டால் ஸ்பீடி டைகர்ஸ் குழுவின் வெற்றியைக் கொண்டாட விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் ஈப்போ, அஸ்லான் ஷா ஹாக்கி அரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் மலேசிய அணி நடப்பு சாம்பியனான தென் கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

இந்த போட்டி கடந்த 1983 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது முதல் முதன் முறையாக இப்போதுதான் மலேசிய அணி அக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

கடந்த மே மாதம் ஜாகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய கிண்ணப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து கிண்ணத்தை வென்ற தென் கொரியாவை இந்த அஸ்லான் ஷா கிண்ணப் போட்டியில் வென்றதன் மூலம் மலேசிய அணி பழி தீர்த்துக் கொண்டது.


Pengarang :