ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டத்தோ ஸ்ரீ அன்வார் வருகையால் சுங்கை பூலோ நாடாளுமன்றத்தில் தேர்தல் அலை கலை கட்டியது.

சுபாங்.நவ.17- சுங்கை பூலோ நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ரஹிமுக்கு உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது. 300 மோட்டார் சைக்கிள் புடை சூழ டத்தோ ஸ்ரீ அன்வார் அணி வகுத்து வரவழைக்கப் பட்டார். பிரச்சார மேடைக்கு வந்த பின் மேற்கத்திய ட்ரமர் வாசிக்கப் பட்டு கொண்டு பிரச்சார மேடை வரை அழைத்து வரப்பட்டார். வாக்காளர்கள் அணிதிரண்டு கூடியிருப்பதை கண்டு உற்சாகத்தில் டத்தோ ஸ்ரீ அன்வார் திரண்டு இருந்த மக்கள் வெள்ளத்தின் ஊடே அனைவரிடமும் கை குலுக்கி கொண்ட உள்ளே வந்தார்.
பிரச்சார மேடைக்கு வந்த பின்னரும் கூடாரத்துக்குள் அமர்ந்திருந்த மக்களை சென்று கண்டு நலம் விசாரித்துக் கொண்டே கைக் குலுக்கி வாக்காளர்களை உற்சாகப் படுத்தினார்.
கூடாரத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வாக்காளர்கள் குறைந்தது 3,000 திக்கும் மேற்பட்டவர்கள் அணி திரண்டிருந்தனர்.
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் மலாய்க்காரர்கள் 67% விழுக்காட்டினர். நேற்றை கூட்டத்திலும் அதிகமாக மலாய்க்காரர்கள் அணித் திரண்டு உற்சாக வரவேற்பு நல்கினர். அதே வேளையில் இந்தியர்களும் சீனர்களும் திரண்டு இருந்ததை கண்டு டத்தோ ஸ்ரீ அன்வார் பேரானந்தம் கொண்டார்.
சுபாங் பெர்டானாவில் உள்ள ஒரு உணவகத்துக்கு இரு மருங்கிலும் கூடாரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. அனைத்து கூடாரங்களிலும் வாக்காளர் கூட்டம் பொங்கி வலிந்தது என்று கூறும் அளவிக்கு மக்கள் திரண்டு இருந்தனர். தொடர்ந்து 40 நிமிட உற்சாக உரைக்கு பின்னர் விடை பெற்று சென்றார்.
அதற்கு முன் அணி திரண்டிருந்த வாக்காளர்கள் முன்னிலையில் சுங்கை பூலோ நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளரான டத்தோ இரமணம் இராமகிருஸ்ணனை அறிமுகம் செய்து வைத்தார். கைரியை தோற்கடித்து டத்தோ இரமணனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளர் பெரு மக்களை கேட்டுக் கொண்டார்.
கடந்த 3 தவணையாக இத்தொகுதியில் சிவராசா சிறப்பாக சேவையாற்றியுள்ளார் . அவரது சேவைக்கு அங்கீகாரமாக தான் வாக்காளர் கூட்டம் அணி திரண்டு உள்ளது என்பதை உணர்ந்து டத்தோ ஸ்ரீ அன்பர், சிவராசாவை பாராட்டினார் எனலாம்.டத்த

Pengarang :