ECONOMYSELANGOR

பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு இன்று சம்பளம்- மந்திரி புசார் அறிவிப்பு

ஷா ஆலம், நவ 17- வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களின் வசதிக்காக அவர்களுக்கான சம்பளம் முன்கூட்டியே  அதாவது இன்று வழங்கப்படுகிறது.

பொதுத் தேர்தலில் அவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் பங்கெடுக்கும் வாக்காளர்களின் வசதிக்காக அரசு ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டியே அதாவது நவம்பர் 17ஆம் தேதி வழங்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்வதற்கு வசதியாக வரும் 18ஆம் தேதி விடுமுறை வழங்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தினமாக நவம்பர் 19ஆம் தேதியை தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.


Pengarang :