ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

எம்.எச்.17 விமானப் பேரிடர்- மூவர் குற்றவாளிகள் என டச்சு நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், நவ 18- மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எம்.எச்.17 விமானம் கடந்த 2014ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டு அதிலிருந்த  298 பயணிகள் மற்றும் பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இரண்டு ரஷ்யர்களும் ஒரு உக்ரேன் பிரஜையும் குற்றவாளிகள் என்று தி ஹேக் மாவட்ட நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இகோர் கிர்கின், செர்ஜி டுபின்ஸ்கி மற்றும் லியோனிட் கர்சென்கோ என்ற அம்மூவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

எனினும், இதே குற்றச்சாட்டில் இருந்து மற்றொரு ரஷ்ய நாட்டவரான ஒலெக் புலாடோவை நீதிமன்றம் விடுவித்தது.

நான்கு பேருக்கும் எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் கடந்த  2020ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி  தொடங்கியது.

இருப்பினும், அனைத்து பிரதிவாதிகளும் விசாரணையில் ஆஜராகவில்லை. இதனால் டச்சு சட்டத்தின் கீழ் அவர்கள் ஆஜராகாத நிலையில் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு செய்தது.


Pengarang :