ALAM SEKITAR & CUACAECONOMY

ஆபத்தான நீர் மட்டப் பதிவுகளை கொண்ட ஐந்து மாநிலங்களில் சிலாங்கூர் ஒன்றாகும்

கோலாலம்பூர், 18 நவ: சிலாங்கூர், சரவாக், பகாங், ஜோகூர் மற்றும் மலாக்காவை உள்ளடக்கிய மொத்தம் 8 பகுதிகளில் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் (ஜேபிஎஸ்) அறிவிப்பின் படி நேற்று இரவு 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் ஆபத்தான அளவில் இருந்தது.

சிலாங்கூரில் கோலாசிலாங்கூரில் உள்ள ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள சுங்கை சிலாங்கூர் நிலையம் மற்றும் கோலாலங்காட்டில், புக்கிட் சாங்காங்கில் உள்ள சுங்கை லங்காட் நிலையம் ஆகியவை உள்ளதாகத் ஜேபிஎஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

 ஜோகூரில் உள்ள சிகாமட்; மலாக்கா பிண்டாவில் உள்ள சுங்கை மலாக்கா, அலோர் காஜா மற்றும் மலாக்காவில் உள்ள பத்து ஹம்பர் மலாக்கா தெங்காவில் உள்ள சுங்கை மலாக்கா ஆகியவையும் அபாயகரமான அளவில் நீர் நிலைகளை பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், நெகிரி செம்பிலானில், பெக்கன் லிங்கியில் உள்ள சுங்கை லிங்கி நிலையம், போர்ட் டிக்சன்; ஜெம்போல், பெக்கன் ரொம்பினில் உள்ள சுங்கை மூவார்; தித்தியன் பிந்தாங்கூரில் உள்ள சுங்கை ரெம்பாவ், கோலா பிலாவின் கம்போங் பெரெம்பாங்கில் உள்ள ரெம்பாவ் மற்றும் சுங்கை மூவார் ஆகியவை சம்பந்தப்பட்ட நான்கு நிலையங்கள் எச்சரிக்கை நிலையில் உள்ளன.


Pengarang :