MEDIA STATEMENTPBT

எம்சிஓக்குப் பிறகு மக்கள் வாழ்வு மேம்பட, எம்பி தற்காலிக வணிக அனுமதிகளை வழங்குகினார்.

சுங்கை பூலோ, நவ 18: இன்று பண்டார் பாரு சுங்கை பூலோ வில் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு டத்தோ மந்திரி புசார் தற்காலிக வணிக அனுமதிகளை வழங்கினார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்சிஓ) முடிவுக்கு வந்த பிறகு, மக்களின் வருமானத்தை அதிகரிக்க சிலாங்கூர் மேற்கொண்ட முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“எம்சிஓக்குப் பிறகு, பலர் தங்கள் வருமானத்தை அதிகரிக்க விரும்புவதால் வணிகங்களை நடத்துகிறார்கள், ஆனால் அவர்களிடம் அனுமதி இல்லை. மாநில அரசு ஒருபோதும் தடுக்கவில்லை, மாறாக யாரும் பின் தங்கி விடக்கூடாது என்பதற்காக பல திட்டங்களை ஏற்பாடு செய்து அல்லது செயல்படுத்தி வருகிறது.

“நாம் ஒரு நகரம் அல்லது நகராட்சி அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும், அதற்கு ஏற்ப சேவையின் தரம்  மற்றும் அந்தஸ்தை  உயர்த்திக் கொள்ள வில்லை என்றால்  அதன் அந்தஸ்துக்கு  தகுதியற்றதாக ஆகிவிடுகிறது.

“அப்படி ஒரு வசதியை (நகராட்சி) பெறுவதற்கு நாம் பிரமாண்டமான ஒன்றை இடிக்கவோ அல்லது கட்டவோ தேவையில்லை. ஆனால் நாம் முடிந்தவரை சிறப்பாக ஒழுங்கமைக்க வேண்டும், அதைத்தான் சிலாங்கூர் செய்தது,” என்று அவர் கூறினார்.

வணிக உரிமம் வழங்கும் விழா மற்றும் பண்டார் பாரு சுங்கை பூலோவில் உள்ள ஷா ஆலம் சிட்டி கவுன்சில் (எம் பிஎஸ்ஏ) சாவடியை திறந்து வைத்த பின் அவர் இதனைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் மற்றும் எம்பிஎஸ்ஏ செயல்பாட்டு ஒருங்கிணைப்பு துறை துணைச் செயலாளர் முகமது யூனுஸ் சூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜாலான் 1B/2 பண்டார் பாரு சுங்கை பூலோ வில் உள்ள ஸ்டால் RM321,774 செலவில் கட்டப்பட்டது மற்றும் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வந்த ஆறு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி, எம்பிஎஸ்ஏ நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 7,000 சிறு வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற்றதாக அமிருடின் அறிவித்தார்.

வழங்கப்பட்ட அனுமதியின் காலம் ஒரு வருடம் என்றும், தொழிலை தொடர விரும்புவோர் தொடர விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.


Pengarang :