ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட 127 பெண் வேட்பாளர்களில் 32 பேர் வெற்றி- சட்டமன்றத்திற்கு 15 பேர் தேர்வு

கோலாலம்பூர், நவ 20- பதினைந்தாவது பொதுத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 127 பெண் வேட்பாளர்களில் 32 பேர் வெற்றி பெற்றனர்.

அதே சமயம் பேராக், பகாங் மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் களம் இறங்கிய 60 பெண்களில் 15 பேர் வெற்றிக் கனியைப் பறித்துள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்ட 127 பெண் வேட்பாளர்களில் 16 பேர் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியைச் சேர்ந்தவர்களாவர். சரவா மாநிலத்தின் ஜி.பி.எஸ். கட்சி சார்பில் ஐவரும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் எழுவரும் தேசிய முன்னணி சார்பில் மூவரும் வாரிசான் சார்பில் ஒருவரும் களமிறங்கினர்.

ஹராப்பான் சார்பில் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் பண்டார் துன் ரசாக் தொகுதியில் வெற்றி பெற்றார். கூலாய், சீபூத்தே மற்றும் சிகாம்புட் தொகுதிகளை முறையே தியோ நீ சிங், திரேசா கோக் மற்றும் ஹன்னா இயோ ஆகியோர் கைப்பற்றினர்.


Pengarang :