ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோலா லங்காட் நாடாளுமன்ற ஹராப்பான் வேட்பாளர் மணிவண்ணனின் தோல்விக்கு ம.இ.கா வின் மோகனா முனியாண்டி முக்கிய காரணமா?

கோல லங்காட்  நவ 20 ;–  கோலா லங்காட் நாடாளுமன்ற தொகுதியில் ஆறு முனை போட்டியை எதிர்நோக்கிய ஹராப்பான் வேட்பாளர் மணிவண்ணன் கோவின் 51034 வாக்குகளை பெற்றாலும், 52867 ஒட்டுகளை பெற்ற பெரிக்காத்தான் நேஷனல்  அமாட் யூனுசிடம் தோல்வி கண்டார்.
கோலா லங்காட் நாடாளுமன்ற தொகுதியில்  ம.இ.கா வின் மகளிர் தலைவர் மோகனா முனியாண்டி  அங்கு  போட்டியிட்ட  ஆறு போட்டியாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிட தக்கது  அவர் வெறும் 18,685 வாக்குகளை மட்டும் பெற்றிருந்தாலும், பெரிக்காத்தான் நேஷனல்  அமாட் யூனுசின்  வெற்றிக்கு பெரிய பங்காற்றியுள்ளதாக நம்பப் படுகிறது.

ஹராப்பான் உறுப்பினர்களும்  ஆதரவாளர்களும், கோல லங்காட் வாக்காளர்களின் மதி கூர்மையை  குறைத்து எடை போட்டது மணிவண்ணனின்  தோல்விக்கு  ஒரு காரணம் என்றும் கூறினர். ஹராப்பான்  வேட்பாளர் தனக்கு கடுமையான போட்டியாளரை அடையாளம் காண தவறியதும் ,அதற்கு ஏற்றது போல் தனது தேர்தல் வியூகத்தை மாற்றி அமைக்க தவறியதே அவரின் தோல்விக்கு முக்கிய காரணம் என்றனர்.

எது எப்படி என்றாலும் தோல்விக்கான காரணத்தை ( போஸ்மோர்டம்) ஹராப்பான் கட்சி மட்டத்தில் விவாதித்து, அடுத்த நடவடிக்கை குறித்து திட்டமிடல் மிக அவசியம் என்றனர்.

கோல லங்காட் தொகுதியில் போட்டியிட்ட இதர வேட்பாளர்கள்  அவர்கள் பெற்ற வாக்குகளும் பின்வருமாறு.

முகமாட் ரிட்சுவான்  அப்துல்லா    பெஜூவாங்     591 ஓட்டுகள்.

ஷனரீயா ஜூம் ஹொரி                      சுயேச்சை       512 ஓட்டுகள்
கணேஸ்குமார்                                       பி.ஆர்.எம்        171 ஓட்டுகள்


Pengarang :