ECONOMYMEDIA STATEMENTNATIONAL

அரசாங்கம் அமைப்பதில் நீடித்த முட்டுக்கட்டைக்கு  பக்காத்தான் ஹராப்பான் மற்றும்  பாரிசான் நேஷனல்  தீர்வு காணலாம்

ஷா ஆலம் 21 நவ;- ஹராப்பான்  பாரிசான்  கூட்டு  அரசாங்கம் அமைப்பதற்கு அடிப்படை வேளைகளில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

நாட்டில் கடந்த பல மாதங்களாக நடந்த பல்வேறு  எதிர்பார்ப்பு, ஆராவரம், குற்றச்சாட்டு, கொந்தளிப்பு களுக்கு  இடையே தேர்தலும் முடிந்து.

முடிந்த 15 வது பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும்  ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால்  நிலவிய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண  பல தலைவர்களின் கடுமையான முயற்சியின் வழி, ஆட்சி அமைப்பதில் நிலவிய முட்டுக் கட்டைகள் நீக்கப்பட்டதாக சிலாங்கூர் இன்று  அறிகிறது.

இறுதியாக பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான்  கட்சிகளின் தலைவர்கள் இன்று மதியம் 12.00 மணிக்கு கோலாலம்பூர் பான்  பசிபிக்  ஹோட்டலில் சந்தித்து ஒரு உடன்பாடு காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும். இதனால் தேசிய அளவில் அரசாங்கம் அமைக்கும் விகாரம்  மட்டுமின்றி பேராக் மற்றும் பகாங் மாநில  அரசாங்கங்கள் அமைப்பதிலும் ஒரு உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இது தொடர்பான செய்திகள் பின் வரும்


Pengarang :