ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாளை முதல் ஞாயிறு வரை கிள்ளானில் கடல் பெருக்கு அபாயம்- விழிப்புடன் இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

ஷா ஆலம், நவ 21- நாளை தொடங்கி வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை கிள்ளான் வட்டாரத்தில் கடல் பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த இயற்கை பேரிடர் காரணமாக வெள்ளம் மற்றும் தடுப்பணை உடையும் சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியம் உள்ளதாக கிள்ளான் மாவட்ட நில அலுவலகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

பொது மக்கள் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் தொடர்பில் மிகுந்த விழிப்புடன் இருக்கும்படியும் கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை நிறுவனம் வலியுறுத்தியது.

அரசாங்க நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினர் வெளியிடும் வானிலை தொடர்பான தகவல்களை அணுக்கமாக கவனிக்கும் அதே வேளையில் உத்தரவுகளையும் பின்பற்றி நடக்கும் படி அது கேட்டுக் கொண்டது.

இந்த பேரிடரை எதிர் கொள்வதற்காக இம்மாதம் 22 முதல் 27 வரை பேரிடர் நடவடிக்கை அறை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :