ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தேர்தல் தினத்தன்று பட்டாசு வெடித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஐவர் கைது 

கோலாலம்பூர், நவ 21- பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு தினமான நேற்று முன்தினம் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுத் தேர்தல் நடவடிக்கை இயக்குநர் டத்தோ ஸ்ரீ அஸானி கசாலி கூறினார்.

இதன் தொடர்பில் நெகிரி செம்பிலானில் நால்வரும் சிலாங்கூரில் ஒருவரும் கைது செய்யப்பட்ட வேளையில் 219 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

சிரம்பானில் மூவரும் போர்ட்டிக்சனில் ஒருவரும் 1957ஆம் ஆண்டு வெடிப்பொருள் சட்டத்தின் 8வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 கடந்த சனிக்கிழமை இரவு 7.45 மணியளவில் கிளப் துவாங் மம்பாவ் வளாகத்தில் பட்டாசு வெடித்த குற்றத்திற்காக இருவரும் போர்ட்டிக்சன் மாவட்ட நிர்வாக தொகுதியில் பட்டாசு வெடித்ததற்காக ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்று அவர் சொன்னார்.

சிரம்பான் டேவான் பண்டாராயாவில் வாக்கு எண்ணும் பகுதிக்கு அருகே அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்காக  ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சிலாங்கூர் மாநிலத்தின் யாம் லாமா தேசிய பள்ளியின் வாக்களிப்பு மையத்தில் வாக்குச்சீட்டு பெட்டியை தள்ளி சச்சரவில் ஈடுபட்ட ஆடவர் விசாரணைக்காக தடுத்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :