ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

அனைத்துலக பூப்பந்து சம்மேளனப் போட்டி- இறுதிச் சுற்றுக்கு நாட்டின் ஆறு இரட்டையர்கள் தேர்வு

கோலாலம்பூர், நவ 23- வரும் டிசம்பர் 7 முதல் 11ஆம் தேதி வரை தாய்லாந்தின் பேங்காக்கில் நடைபெறும் அனைத்துலக பூப்பந்து சம்மேளனப் போட்டியின் (பி.டபள்யூ.எஃப்) இறுதிச் சுற்றுக்கு நாட்டின் ஆறு இரட்டையர் ஜோடிகள் தேர்வாகியுள்ளன.

அனைத்துலக வெற்றியாளர்களான ஏரோன் சியா-சோ ஊய் யீக் ஜோடி, ஆஸதிரேலியா பொது பூப்பந்து போட்டியின் இரண்டாம் நிலை வெற்றியாளர்களான ஓங் யீ சின்-தியே ஈ யி ஜோடி, பிரான்ஸ் பொது பூப்பந்து போட்டியின் மகளிர் இரட்டையர் அணி வெற்றியாளர்களான பியர்லி டான்-எம்.தினா ஜோடி ஆகியோர் இப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

மேலும், விவியன் ஹூ-லிம் சியு சியேன், தேசிய தொழில்முறை கலப்பு இரட்டையர்களான கோ சூன் ஹூவாட்-ஷிவோன் லாய் ஜிமி மற்றும்  டான் கியான் மெங்-லாய் பிங் ஜிங் ஆகியோர் இப்போட்டியில் பங்கேற்கும் இதர ஆட்டக்காரர்கள் ஆவர்.

இந்த தேசிய ஜோடிகள் அனைத்தும் எட்டு சிறந்த ஜோடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேளையில் ஏரோன்-ஊய் ஜோடி அனைத்துலக வெற்றியாளர் என்ற அடிப்படையில் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.

இந்த போட்டிக்கு  அனைத்துலக பூப்பந்து பயணத் தொடரின் 19 போட்டிகள் உள்பட மொத்தம் 24 போட்டிகள் நடத்தப்பட்டு இறுதிச் சுற்று பேங்காக்கில் நடத்தப்படுகிறது.


Pengarang :