ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

ஆறு மாநிலங்களில் 1,301 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்; சிலாங்கூரில் எண்ணிக்கை குறைந்துள்ளது

கோலாலம்பூர் நவ 23;- இன்று காலை மணி 8 நிலவரப்படி, 6 மாநிலங்களில் 369 குடும்பங்களைச் சேர்ந்த 1,301 பேர்  தற்காலிகத் தங்கும் மையங்களில் உள்ளனர். 

பேராகில்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) தனது முகநூலில் வெளியிட்டது. அதாவது 5 மாவட்டங்களில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 780 பேர் 9 தற்காலிகத் தங்கும் மையங்களில் தங்கியுள்ளதாக அப்பதிவு காட்டுகிறது. 

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 390ஆக குறைந்துள்ளது. 111 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள்  இரண்டு மாவட்டங்களில் உள்ள 9 தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

நேற்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்கும் மாநிலங்கள் கிளந்தான் (30), கோகூர் (62) மற்றும் மலாக்கா (11) ஆகும். மேலும், பகாங்கில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேராகப் பதிவாகியுள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே தற்காலிகத் தங்கும் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

 நேற்று இரவு மணி 8 நிலவரப்படி, 4 மாநிலங்களைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,251 பேர் இன்னும் தற்காலிகத் தங்கும் மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

 


Pengarang :