ECONOMYSELANGORWANITA & KEBAJIKAN

பட்ஜெட் 2023 பெண்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் அடையாளம்

ஷா ஆலம், நவ 27: தனித்து வாழும் தாய்கள் உட்பட பெண்களைப் பற்றி அக்கறை கொண்டது ” பட்ஜெட் சிலாங்கூர் 2023” என பாராட்டினார் பெர்மாத்தாங் சட்டமன்ற உறுப்பினர்.

இளம் தொழில் முனைவோர் ஊடக டிஜிட்டல் ஊக்குவிப்புத் திட்டங்கள் வழி வணிகத்  துறையில்  ஆர்வம் கொள்ளவும் அதிக அறிவைப் பெற உதவுவதாக ரோசானா ஜைனல் அபிடின் கூறினார்.

“தொழில் புரட்சி 4.0 (IR4.0) யை நோக்கி நகரும் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப, பல பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி டிஜிட்டல் மீடியா துறையில் மேம்பாடு அடைவார்கள் என்று நம்புகிறேன்.

 “உண்மையில், ஹலால் (சூரி) குடும்ப மாது திட்டத்திற்கான மாநில அரசின் ஒதுக்கீடு பெண்கள் திறன் மேம்பாடுகளுக்கும் பொருந்தக்கூடிய திட்டங்களுக்கு உதவக்கூடியது.  அவர்களின் வருமானத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது, இதனால் குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த அவர்களுக்கு உதவும் என்றார்.

மேலும், தனித்து வாழும் தாய்மார்கள் தங்கள் சொந்த வீடுகளை பெறுவதற்கு, ரூமா சிலாங்கூர் கூ போன்ற மலிவு விலை வீடுகளில்  சிறப்பு ஒதுக்கீடு சலுகைகளை வழங்குவதற்கான மாநில அரசின் முன்முயற்சியும் சிறந்ததாக கருதப்படுகிறது என்று ரோசானா கூறினார்.

“தகுதியுள்ள அனைத்து தனித்து வாழும் தாய்மார்கள் எதிர்கால தேவைக்கு வசதியான இடம் இருப்பதையும், அவர்கள் ஒதுக்கி வைக்கப் படாமல் இருப்பதையும் சிலாங்கூர் அரசாங்கம் உறுதிப்படுத்த விரும்புகிறது என்பதற்கு இது ஒரு சான்று” என்று அவர் கூறினார்.

வெள்ளியன்று, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி #கித்தாசிலாங்கூர்:- வளர்ச்சியை மேம்படுத்த , ஒற்றுமையை வலுப்படுத்த, நம்பிக்கையுடன் வெற்றி என்ற கருப்பொருளுடன் சிலாங்கூர் பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்தார்.

பட்ஜெட் மூலம், அடுத்த ஆண்டு பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்வதற்காக 2023 பட்ஜெட்டில் மாநில அரசு RM245 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.


Pengarang :