ANTARABANGSAMEDIA STATEMENTNATIONALPBT

விரைவு பேருந்து டிரெய்லர் லோரியை மோதியது- 16 பயணிகள் காயம்

ஜாசின், நவ 28- விரைவு பேருந்து டிரெய்லர் லோரியை மோதிய சம்பவத்தில் 16 பயணிகள் லேசான காயங்களுக்குள்ளாயினர்.  இச்சம்பவம் வடக்கு-தெற்று நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தின் 179.2வது கிலோ மீட்டரில் இன்று அதிகாலையில் நிகழ்ந்தது. 

இந்த விபத்து தொடர்பில் அதிகாலை 3.57 மணியளவில் தாங்கள் அவசரப் புகாரைப் பெற்றதாக ஜாசின் பெஸ்தாரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின்  நடவடிக்கை அதிகாரி அஸ்மான் முகமது டவான் கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஜாசின் மற்றும் தங்காக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 17 அதிகாரிகள் மற்றும் வீரர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது மறுசுழற்சி பொருள்களை ஏற்றிச் சென்ற டிரெய்லர் லோரியை 27 பயணிகளை ஏற்றியிருந்த விரைவு பேருந்து மோதியுள்ளதை வீர்கள் கண்டனர். 

உனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு பயணிகளை காப்பாற்றிய அவர்கள் காயமடைந்த 16 வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதனிடையே, அந்த பஸ்சில் பயணம் செய்த அனைவரும் சிங்கப்பூரியர்கள் என்றும் சம்பவத்தின் போது அவர்கள் அனைவரும் கோலாலம்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாகவும் ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி மிஸ்பானி ஹம்டான் கூறினார்.

அந்த பஸ்சை ஓட்டிய 42 வயது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த டிரெய்லர் லோரியை மோதியது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.


Pengarang :