ALAM SEKITAR & CUACAHEALTHMEDIA STATEMENTNATIONAL

வெள்ளம்- சிலாங்கூர், பேராக்கில் மாற்றமில்லை- மலாக்காவில் ஒரு நிவாரண மையம் திறப்பு

வெள்ளம்- சிலாங்கூர், பேராக்கில் மாற்றமில்லை- மலாக்காவில் ஒரு நிவாரண மையம் திறப்பு

 

ஷா ஆலம், டிச 2- சிலாங்கூர், பேராக் மற்றும் மலாக்காவில் உள்ள நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று மாநிலங்களிலும் இன்று காலை 8.00 நிலவரப்படி 146 குடும்பங்களை சேர்ந்த 516 பேர் ஆறு துயர் துடைப்பு மையங்களில் அடைக்கம் நாடியுள்ளனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மலாக்கா புதிதாக இணைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது. இம்மாநிலத்தில் ஒரு வெள்ள துயர் துடைப்பு மையம் திறக்கப்பட்டு அங்கு 20 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

சிலாங்கூரிலுள்ள மூன்று துயர் துடைப்பு மையங்களில் 170 பேர் தங்கியுள்ள வேளையில் பேராக்கில் உள்ள இரு மையங்களில் 317 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.

இதனிடையே, இன்று மாலை தொடங்கி இரவு வரை தீபகற்ப மலேசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.


Pengarang :