ALAM SEKITAR & CUACAECONOMY

சிலாங்கூரில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை

ஷா ஆலம், டிச 3 – சிலாங்கூரில் புதிதாக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அல்லது கடைகள் செயல்பட மாநில அரசு அனுமதிக்காது என மாநிலச் சுற்றுச்சூழல்  ஆட்சிக்குழு உறுப்பினர்  ஹீ லாய் சியான் தெரிவித்தார்.

ஏப்ரல் 20 அன்று பதினொராவது சிலாங்கூர் மாநிலச் செயற்குழு (MMKN) கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப் பட்டது என்றார்.

“மேலும், பிளாஸ்டிக் மறுசுழற்சி செயல்முறையை மேற்கொள்ளும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ய மாநில அரசு தடை விதிக்கும் எனக் கூறப்பட்டது.

பிளாஸ்டிக் பைகளை நிர்வகிப்பதில் கவனமாக திட்டமிட படாவிட்டால், சுற்றுச்சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஹீ கூறினார்.

2023 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் வரவு செலவுத்திட்டத்தின் இறுதிக்கட்டத்தின் போது, நேற்று மாநிலச் சட்டப் பேரவைக் கூட்டத்தில் கவுன்சிலர் இதைப் பற்றி பேசினார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு திட்டங்கள் அல்லது பிரச்சாரங்களை செயல்படுத்துவதன் மூலம் மாநில அரசு ஒரு முனைப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக ஹீ கூறினார்.

“பூஜ்ஜிய பிளாஸ்டிக் சமுதாயத்திற்கானத் திட்டமிடல் மிகவும் திறம்பட செயல்படுத்தப்படுவது உறுதி செய்வதற்கு, மாநில அரசு எப்போதும் சுற்றுச்சூழல் திட்டங்கள் அல்லது பிரச்சாரங்களை மேம்படுத்தும்,” என்றும் அவர் கூறினார்.


Pengarang :