ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் சக்காட் வாரியம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு RM19 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.

புஞ்சாக் ஆலம், டிசம்பர் 3: சிலாங்கூர் சக்காட் வாரியம் (LZS) மாநில மக்களுக்கு, குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்னாஃப்களுக்கு உதவுவதற்காக RM19 மில்லியன் நிதியை வழங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு முறை மட்டும் வழங்கப்படும் உதவிக்கு 21 நவம்பர் 2022 முதல் 31 ஜனவரி 2023 வரை திறந்திருக்கும் என்று அவ்வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் சபிரின் முகமட் சர்பினி தெரிவித்தார்.

“சமீபத்தில் ஷா ஆலம், சிப்பாங், கோலா லங்காட், கிள்ளான், கோலா சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதினால் இவ்வுதவி தொடங்கப் பட்டது.

“பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களிடமிருந்து இதுவரை சுமார் 400 விண்ணப்பங்களை மட்டுமே நாங்கள் பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு போல் பெரிய வெள்ளம் இல்லாததால் பலர் விண்ணப்பிக்கவில்லை,” என்றார்.

இந்த உதவியானது பேரழிவை எதிர்கொண்ட அஸ்னாஃப் அல்லாத மக்களுக்கும் வழங்குவதாக முகமட் சபிரின் கூறினார்.

மேலும் தகவல்களைப் பெற விரும்புவோர் www.zakatselangor.com.my/peduli அகப்பக்கத்தை நாடலாம்.


Pengarang :