ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2023 செப்டம்பர் மாத்திற்குள் 60 லட்சம் பேரை இலவச காப்புறுதித் திட்டத்தில் சேர்க்க இலக்கு

உலு சிலாங்கூர், டிச 4- அடுத்தாண்டு செப்டம்பர் மாத்திற்குள் சிலாங்கூர் பொது காப்புறுதி திட்டத்தில் (இன்சான்) 60 லட்சம் பேரை சேர்க்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

பத்தாயிரம் வெள்ளி வரையிலான காப்புறுதி பாதுகாப்பை வழங்கக் கூடிய இந்த இலவச காப்புறுதித்  திட்டத்தில் இதுவரை 35 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தனது மக்களுக்கு இலவச காப்புறுதி பாதுகாப்பை வழங்கும் தென்கிழக்காசியாவின் ஒரே மாநிலமாக சிலாங்கூர் விளங்குகிறது என்று அவர் சொன்னார்.

இத்திட்டத்தில் இதுவரை 35 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் 60 லட்சம் பேர் இத்திட்டத்தில் பதிந்திருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு நடைபெற்ற உலு சிலாங்கூர் மாவட்ட நிலையிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங்  நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

பிறந்து 30 நாள் ஆன குழந்தை முதல் 80 வயதானவர்கள் வரை பயன்பெறும் வகையில் இந்த இன்சான் காப்புறுத் திட்டத்தை மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்திற்கு தேவையான பிரீமயத் தொகையை  மாநில அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

சுமார் 6,000 கோடி வெள்ளி மதிப்பிலான காப்புறுதி பாதுகாப்பை வழங்கும் இந்த  திட்டத்தின் மூலம் விபத்தின் காரணமாக உயிழப்பு மற்றும் நிரந்தர முடத்தன்மைக்கு 10,000 வெள்ளி வரை இழப்பீடு வழங்கப்படும்.


Pengarang :