ALAM SEKITAR & CUACAECONOMYPENDIDIKANSELANGOR

முன்னாள் அமைச்சர்களின் ஆலோசனைகளை கருத்தில் கொள்வேன்- சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா கூறுகிறார்

புத்ராஜெயா, டிச 5- சுகாதார அமைச்சை வழிநடத்துவதில் அதன் முன்னாள் அமைச்சர்கள் வழங்கும் ஆலோசனைகள், உதவிகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளத் தாம் தயாராக உள்ளதாக சுகாதார அமைச்சர் பதவியை புதிதாக ஏற்றுள்ள டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.

சுகாதார அமைச்சுக்கு தலைமையேற்று வழிநடத்துவதில் தமக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருப்பதாக அவ்வமைச்சுக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியான அவர் சொன்னார்.

தாங்கள் முன்பு அமல்படுத்திய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆலோசனை அல்லது பரிந்துரைகள் ரீதியாக வழங்கும் எந்த உதவியையும் நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்றார் அவர்.

எனினும், புதிய அமைச்சர் என்ற முறையில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் வழங்கக்கூடிய விளக்கமளிப்பை முதலில் செவிமடுத்து தொடர்ந்து அமல்படுத்தக்கூடிய, சரி செய்யக்கூடிய அல்லது நிராகரிக்கக்கூடிய கொள்கைகள் யாவை என தீர்மானிக்க வேண்டியுள்ளது என்ற அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார். முன்னதாக இன்று காலை 8.30 மணியளவில் அமைச்சுக்கு வந்த டாக்டர் ஜலிஹாவை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஹர்ஜிட் சிங் மற்றும் உயர் நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர்.

இதனிடையே, இந்த நியமனம் குறித்து தாம் பெருமிதம் கொள்வதாக கூறிய ஜலிஹா, பெண்களை உயர் மட்டத்தில் குறிப்பாக சுகாதார அமைச்சில் கொள்கை வகுக்கும் அளவுக்கு உயர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது என்றார்.


Pengarang :