ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

காஜாங் மாநிலச் சட்டமன்றத்தின் பள்ளி உதவி திட்டத்திற்கான விண்ணப்பங்களை இவ்வார இறுதியில் சமர்ப்பிக்கலாம்

ஷா ஆலம், டிச 8: காஜாங் மாநிலச் சட்டமன்ற மக்கள் சேவை மையம், 2016யின் சி மன்ஜா தவாஸ் பள்ளி நுழைவு உதவித் திட்டத்திற்கான (பிபிஎம்எஸ்) விண்ணப்பங்களைப் பொதுமக்கள் இவ்வார இறுதியில் மெட்ரோ அவென்யூ 1யில் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

இவ்வார இறுதியில் காலை மணி 10 முதல் மாலை மணி 4.30 வரை அவ்விண்ணப்பங்களை ஒப்படைக்கும் கவுண்டர் திறந்திருக்கும் என்றும், கூட்ட நெரிசலைத் தவிர்க்க தாய் அல்லது தந்தை மட்டுமே வருகை புரியவும் என்றும் யயாசன் வாரிசான் அனாக் சிலாங்கூர் (யவாஸ்) பேஸ்புக் மூலம் தெரிவித்தது.

கைப்பேசி மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தங்களைப் பற்றியத் தகவல்களையும் கடவுச்சொல்லையும் பதிவு செய்துகொள்ள யாவாஸ் பொதுமக்களை ஊக்குவிக்கிறது. யாயசான் வாரிசான் அனாக் சிலாங்கூர் திட்டம் 30 ஆகஸ்ட் 2008ஆம் அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டம் சிலாங்கூரில் பிறந்த குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். குழந்தைகளுக்கு மூன்று வயது நிறைவடையும் முன்பே இவ்வுதவிக்கு விண்ணப்பம் செய்யப்பட வேண்டும், பின் அவர்கள் 18 வயதை அடைந்தவுடன் RM1,500 பெறுவார்கள்.


Pengarang :