ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

கிள்ளானில் ஐந்தாவது ஜெலஜா தொழில்முனைவோர் டிஜிட்டல் சிலாங்கூர் திட்டம்

கிள்ளான், டிச 10: வர்த்தகத் தொழிநுட்ப டிஜிட்டல் சிலாங்கூர் நிர்வாகத்தால் (Sidec) ஜெலஜா தொழில்முனைவோர் டிஜிட்டல் சிலாங்கூர் திட்டம் நடத்தப்படுகிறது. ஸ்மார்ட் சிலாங்கூரை உருவாக்க ஏற்பாடு செய்யும் திட்டங்களில் இதுவும் ஒன்று.

சிலாங்கூர் அரசாங்கம் 2025ஆம் ஆண்டுக்குள் ஆசியா அளவில் ஸ்மாட் மற்றும் மக்கள் வாழத் தகுந்த மாநிலமாக மாற விரும்புகிறது என்று முதலீட்டு எஸ்கோ  டத்தோ டெங் சாங் கிம் கூறினார்.

“இந்த திட்டத்தில் பங்கேற்கும் தொழில்முனைவோர், கோவிட்-19யின் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான அறிவு மற்றும் திறன்களைக் கொண்டுள்ளனர், இதனால் வணிகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் தொடர்ந்து மேம்படும்,” என்று அவர் கூறினார்.

இன்று ஜெலஜா தொழில்முனைவோர் டிஜிட்டல் சிலாங்கூர் திட்டத்தின் ஐந்தாவது தொடக்க விழாவில் அவர் பேசினார். முன்னதாக சிடெக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திட்டம் கோம்பாக், உலு சிலாங்கூர், பெட்டாலிங் மற்றும் கோலா சிலாங்கூரில் நான்கு தொடர்களாக நடத்தப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றடைந்து, சர்வதேசச் சந்தையில் நம் தொழில்முனைவோர் எளிதாகவும், விரைவாகவும் செயல்பட உதவியது.


Pengarang :