ECONOMYSUKANKINI

மொராக்கோ போர்ச்சுகல், பிரான்ஸ்- இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது

ஷா ஆலம், டிச.11: கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள அல் துமாமா மைதானத்தில் நேற்று இரவு நடந்த 2022 உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தியது.

அரையிறுதிக்கு முன்னேற, தன் அணிக்கு ஒரே  கோலை 42 வது நிமிடத்தில் யூசுப் என்-நெசிரி அடித்து  வரலாறு படைத்தார். போர்ச்சுகல் கோல்கீப்பர் டியோகோ கோஸ்டாவை கடக்கப் பந்தை தலையால் முட்டி கோல் ஆக்கினார் யூசுப் என்-நெசிரி.

போர்ச்சுகலின் கோல் தேடும் முயற்சிக்கு, முதல் பாதியின் முடிவில் கிராஸ்பாரில் அடித்த பந்து உட்படப்  புருனோ பெர்னாண்டஸ்   மூலமும்  பல வாய்ப்புகள் கிடைத்தன.

இரண்டாவது பாதியில் அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை அறிமுகப்படுத்துவதன் மூலம் முயற்சிகள் இரட்டிப்பாக்க பட்டன, ஆனால் ஆட்டம் முடியும் வரை போர்ச்சுகல் முடிவை மாற்ற தவறிவிட்டது.

கத்தாரின் அல் கோரில் உள்ள அல் பேட் ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் சவாலைச் சமாளித்து 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது.

இந்த வெற்றியின் வழி அரையிறுதியில்  மொராக்கோவை அது சந்திக்கும்.
நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் அணி 17வது நிமிடத்தில் ஓர்லியேன் மூலம் அடித்த கோலின்  வழி முன்னிலை பெற்றது, ஆட்டத்தின் முதல் பாதி முடியும் வரை அந்த நிலை நீடித்தது.

ஒன்பது நிமிட ஆட்டத்திற்கு பிறகு, கேப்டன் ஹாரி கேனின்  பெனால்டி உதை வழி,  இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இருப்பினும் 78வது நிமிடத்தில் பிரான்ஸை முன்னிலைப்படுத்த ஒலிவியர் ஜிரூட் கோல் அடித்தார், மேலும் ஆட்டம் முடிய ஆறு நிமிடங்கள் இருக்கும் போது  இங்கிலாந்துக்குக் கிடைத்த  பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சமன் செய்ய முடியாமல் போனது


Pengarang :