ECONOMYMEDIA STATEMENT

ஐந்து மாவட்டங்களில் கிட்டத்தட்ட 1,000 பேர் பங்கேற்ற டிஜிட்டல் தொழில் முனைவோர் பயணம் நல்ல வரவேற்பை பெற்றது.

கிள்ளான், டிச 11: சிலாங்கூர் டிஜிட்டல் எக்னோமி இன்ஃபர்மேஷன் தெக்னேலஜி கார்ப்பரேஷன் (Sidec) மூலம் நடத்தப்படும் சிலாங்கூர் டிஜிட்டல் தொழில் முனைவோர்  பயண திட்டம் 2022 இல் கிட்டத்தட்ட 1,000 தொழில்முனைவோர் பங்கேற்றனர்.

கோம்பாக், உலு சிலாங்கூர், பெட்டாலிங், கோலா சிலாங்கூர் மற்றும் கிள்ளான் ஆகிய இடங்களில் ஐந்து தொடர் சுற்றுப்பயணங்களில் பங்கேற்றதாக சைடெக் தலைமை நிர்வாக அதிகாரி யோங் காய் பிங் கூறினார்.

“இந்த பயணத்தில்  டிஜிட்டல் உலகத்தைப் பற்றி சமூகத்தில்  பிரபலப்படுத்துவதையும்,     இ-காமர்ஸ் துறையில்  தொழில் தொடங்க விரும்பும் உள்ளூர் நிறுவனங்களுக்கு உதவி வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

“2020 ஆம் ஆண்டு தொடங்கி 670 பங்கேற்பாளர்களின் பங்கேற்புடன், கடந்த ஆண்டு கோவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப் பட்டதைத் தொடர்ந்து,  இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1,000 பேருடன் பயணிப்பது, அத்துறைக்கான  தேவை அதிக உள்ளதை காட்டுவதாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

இன்வெஸ்ட்மென்ட் EXCO டத்தோ டெங் சாங் கிம் தலைமையில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது தொடர் சிலாங்கூர் டிஜிட்டல் தொழில் முனைவோர் சுற்றுப்பயணம் 2022 இல் அவர் பேசினார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை 8,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் பங்கேற்புடன் இ-காமர்ஸ் வகுப்பு இப்போது வளர்ச்சிக்கு  சாதகமாக உள்ளதாக  அவர் விளக்கினார்.

“ஆரம்பத்தில், 15 வகுப்புகளுடன் 3,000 பங்கேற்பாளர்களுடன் தொடங்கிய திட்டம், இப்போது 48 சதவீதம் அதிகரித்துள்ளது, அதாவது 8,053 பங்கேற்பாளர்கள் மற்றும் 25 வகுப்புகளுக்கு மேல் வளர்ந்துள்ளது..
“இந்த அதிகரிப்பு சந்தையில் தங்கள் வணிக திறனை அதிகரிக்க டிஜிட்டல் மயமாக்கல் முக்கியம் என்பதை மக்களுக்கு உணர்த்துவதில் Sidec வெற்றி பெற்றுள்ளது என்பதை காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

Sidec ஏற்பாடு செய்த டிஜிட்டல் தொழில் முனைவோர் நிகழ்ச்சியானது கோம்பாக், உலு சிலாங்கூர், பெட்டாலிங், கோலா சிலாங்கூர் ஆகிய ஐந்து தொடர்களாக நடைபெற்று கிள்ளான் நகரில் முடிவடைந்தது.

கடந்த தொடரில், சிலாங்கூர் டிஜிட்டல் தொழில் முனைவோர் பயணம் 2022, Shopee, Lazada, Touch ‘n Go eWallet, Hijrah Selangor, Epic Unicorn, TikTok Shop, Grab மற்றும் Sprii Commerce போன்ற தொழில் நிறுவனங்களின் கூட்டாளர்களைக் கொண்டு வருகிறது.


Pengarang :