ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

கனமழை நீடித்தால் ஐந்து மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளம் ஏற்படும்

கோலாலம்பூர், டிச 16- இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை தொடர்ச்சியாக பெய்யும் பட்சத்தில் ஜொகூர், பகாங், திரங்கானு, சரவாக் மற்றும் பேராக்கில் அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தேசிய முன்கணிப்பு மற்றும் வெள்ள எச்சரிக்கை மையமும் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறையும் எச்சரித்துள்ளன.

ஜோகூர் மாநிலத்தில் மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி ஆகிய மாவட்டங்களிலும் பகாங்கில் குவாந்தான், ரொம்பின் ஆகிய மாவட்டங்களிலும் மோசான வானிலை நிலவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அம்மையம் நேற்று மாலை 5.00 மணியளவில் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

திராங்கானு மாநிலத்தின் கோல திரங்கானு மற்றும் மாராங் ஆகிய மாவட்டங்களும் சரவா மாநிலத்தின் முக்கா மாவட்டமும் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்று அது தெரிவித்தது.

பேராக் மாநிலத்தைப் பொறுத்தவரை ஹிலிர் பேராக், கிரியான், லாருட், பாகான் டத்தோ, கம்பார், பேராக் தெங்கா ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என கூறப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக மக்கள் முன்கூட்டியே தயாராக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Pengarang :